மேற்கு ஐரோப்பா நாடான பிரான்ஸிலிருந்து “பிரான்ஸ் ஃபுட்பால்” என்கிற விளையாட்டுத் துறை பத்திரிகை நிறுவனம் 1956-ஆம் ஆண்டு முதல் “பாலன் டி ஆர்” (BALLON D’OR) என்ற பெயரில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வாக்கெடுப்பின் மூலம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. நடப்பாண்டுக்கான “பாலன் டி ஆர்” விருதிற்கு அர்ஜெண்டினா அணியின் கேப்டனும், பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸி (686 புள்ளிகள்) தேர்வு செய்யப்பட்டுள் ளார். விர்ஜில் வான் டிஜிக் (679 புள்ளிகள் - நெதர்லாந்து, லிவர்பூல்), கிறிஸ்டியானோ ரொனால்டோ (476 புள்ளிகள் - போர்ச்சுக்கல், ஜுவென்டஸ்) ஆகியோர் அடுத்த 2 இடத்தில் உள்ள னர். மெஸ்ஸிக்கு இது 6-வது பட்டமாகும். நடப்பாண்டுக்கான பிபா சிறந்த வீர ருக்கான விருதையும் மெஸ்ஸி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.